Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content

Main menu:

அரசியல்

பிறக்கும் போதே இறப்பதைப் பற்றி சிந்திப்பதில்லை, வாழ்வைப் பற்றி தான் சிந்திக்கின்றோம்.
ஆனால், இறப்பது நிஜம் என தெரிந்தும்,  மனித நேயத்தை மறந்து எமக்காக வாழ்வது நியாயமா !
மனிதனாக வாழப்பழகு, உதவி செய்து மற்றவரை உன்னைப்போல் நேசிக்க முயலு,


உன் இனத்தில் அன்பு பாசம் இருந்தால்  உதவி செய்!
இறைவன்  இருக்கின்றார்   தர்மம் வெல்லும்   என்பதை நம்பு !
இனி மக்கள் நின்மதியாக வாழ வழி தேடுவோம்.

நாம் இன்னும் ஒற்றாகவில்லை, ஒற்றுமையாகப்பணி செய்யவில்லை, எதையும் சாதிக்கவில்லை என்பதை புலம் பெயர் எந்த அமைப்போ, அல்லது தனி மனிதத் தமிழனோ ஏற்றுக் கொள்ளவேண்டும். காரணம், ஒற்றிமையை நாம் தொலைத்ததால், எமது இனம் படுகுழியில் விழுந்துவிட்டது.   தமிழரை தள்ளியது, தவிக்கவிட்டது நாமே, தூக்கிவிட முயலவில்லை, என்பதை உணரவேண்டும். ஒற்றுமைப்பட்டு சாதிக்கத் தெரியாத தமிழ் இனம் நாங்கள் என்பதையாவது ஏற்றுகொள்ளுங்கள்.
உனக்கும் ஒரு கதி வரும் அப்போ முழிப்பாய் தமிழா !


தமிழ் விடுதலைக்கூட்டணியின் செயல்பாடு எனக்கு ஒரு திருப்பதியைத் தந்துள்ளது, கொள்கையில் வீரம் காட்டுதல், இது எப்போதும் இருந்தால் நாம் அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி கொள்ளலாம், தமிழரில் கட்சி தாவும், நபர்கள் எதுவும் சாதித்ததாக வரலாறு இல்லை, தமிழருக்கு என எதையும் செய்யமுடியாது தான் வாழலாம். எனவே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கை வீரம் இப்படியே இருக்கட்டும்.


ஆனாலும்,  எமக்கு சரியான தமிழர் தலைமை தேவையாக இருக்கிறது. உறுதியான நிலை, சரியான கொள்கை, மாறாத நிலைப்பாடு ஆதவை, தினம் தினம் புதுப்பிக்கத் தேவையில்லை, தமிழரின் தேவை என்ன, அபிலாசை என்ன, இவை தானே, இதை எப்போதும் மாற்றவேண்டிய நிலை இல்லை.

இதில் உறுதியான தமிழ்த் தலைவன் தேவை, தமிழ்க் கட்சி தேவை.  இதுவரை இருந்தவர்கள், என்ன செய்தார்கள், பொறுங்கள், என்றவர்கள் எவ்வளவு காலம் பொறுப்பது, இன்றே முடிவொடு. பறை சாற்று, மாற்றம் வேறு இல்லை,  சிங்கள அரசியல்வாதிகளிடம்  நிபந்தனையை வைத்து செயல்படு, நிபந்தனையற்ற வாக்குறுதிகளை தழிழ் கட்சிகள் கொடுப்பது எப்படி, இப்போ எல்லாம், தவிடுபொடி,

தமிழர் அழைவரும், ஈழத்தமிழர், இந்தியத் தமிழர், புலம் பெயர் தமிழர்கள் ஒன்றினைந்தால் எமக்கு விடிவு உடனே கிடைக்கும், அதை நடத்தி செல்ல ஒலு தலைமை வேண்டும்.  அது தான் இப்போதய தேவையாகும்.


எம் இனத்திற்காக,
உன் மொழிக்காக,
உன் நாட்டிற்காக
என வாழ வா,
அதன் பின் உன் மரணம் வருவதைப் பற்றிக் கலங்கமாட்டாய்!
அது தான் மகிழ்வான வாழ்க்கையாகும் என்பதை அறிந்து கொள்!

காலம் உன்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்.
அந்த காலம்    உன் முன் வருகிறது.
சந்தற்பம் உன்னைத் தேடி வரும் அது காலம் தான்
அதிஸ்ட காலம் என்போம்.
வருகிறது   தவறவிடாதே!


கிரகங்கள் மாறுகின்றன, இறைவன் மாற்றங்களை உருவாக்குகின்றார்,  தப்பு செய்தவன் தண்டணை அடைவான்,

காலம், ஒரே இடத்தில் நிற்காது, அதிஸ்டம், ஒரே இடத்தில் அமராது, பணம் ஒரே இடத்தில் இருக்காது, உலகம் ஒரே இடத்தில் நிற்காது சுற்றுகிறதே  இது தான் வாழ்க்கை, உன் கையில் கூட  பணம், பலம் ஒரு நாள் வரும் அதை  சரியாக செய்யத்தயாராக இரு. குறிப்பாக ஒற்றுமையாக இரு.


இலங்கை ஆட்சியாளர்களால், இலங்கையில் பொருளாதார முன்னேற்றத்தை சரியாக கொண்டு செல்லமுடியவில்லை, அதற்கு காரணம், நாட்டுப்பற்று அவர்களிடம் இல்லை, விலை போகும் மனிதர்களாக, இருந்தால் அந்த நாடு எப்படி சிங்கப்பூராகமுடியும்.

நாம் பல பாடங்களை எமது நாட்டின் நடைமுறை அரசியலில் அறிகின்றோம். எது சரி என நாமும் புரிந்து கொள்ளமுடியும்.

அதை ஒற்றுமையால் நாம் சாதிக்கமுடியும். அதை தமிழர்கள் புரியவேண்டும். வரும் காலம் எம்முடையது என்பதை மட்டும் மறவாதீர்கள்.

சித்திரை வருடம் பிறக்கும் காலம் தமிழர்கள் ஒன்று பட்டு செயல்பட்டால், வாழ்வு உண்டு என்பதை மனதில் கொள்ளவும்.


நாட்டில், நியாமில்லை, பாதுகாப்பில்லை, கொலை, கொள்ளை  நடக்கிறது. அரசால் அடக்கமுடியாதா!   

வடமாகான முதலமைச்சர் கேட்டது போல், பாதுகாப்பு அதிகாரத்தைத் தாருங்கள் ஒரு மாதத்தில் கட்டுப்படுத்தி காட்டுகிறேன் என குறிப்பிட்டார். நிற்சயமாக அவரால் அது சாதித்து காட்டமுடியும்.


சட்டம் சமனாக நடை பெறாது போனால், இறைவன், மழையால், அல்லது, பூமி அதிர்வால், அல்லது சுனாமியால் இலங்கையை அழித்தே தீருவார்.

காரணம், அநியாயம் கூடிவிட்டது. அரசியல்வாதிகளின் போதிய அறிவின்மையால், நாட்டைப்பற்றி சிந்திக்காத, மக்களைப்பற்றி சிந்திக்காத அரசியல்வாதிகளே எமது நாட்டுக்கு துரோகிகள்.


அரச அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்குகிறார்கள், கடமையைச் செய்ய பணம் கேட்கிறார்கள். குற்றம் செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்க அரச அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் தமிழர்கள் பலர் பாதிப்படைகிறார்கள். இதை எங்கே முறையிடுவது.

இறைவா ஒரு வழி தாரும்.........


அருள் சோதிடம்
சுவிசர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

Arulsothidam
Tamils Marriage Service
Back to content | Back to main menu