Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content

Main menu:

திருமணம்






அறிவித்தல்

இந்தியா, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள், நன்கு படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள், யுவதிகள்  வெளிநாடுகளில் வாழும்  ஈழத்தமிழரைத் திருமணம் செய்யவிரும்பினால், தொடர்பு கொள்ளுங்கள்,  நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நல்ல வரணைத்தேடும் போது, படித்தவர்கள், நல்ல குணம், பண்பு உடையவர்களைத் தேடுவது இயல்பு, வாழ்க்கை என்பது மனதிற்கும், கண்ணுக்கும் பிடித்திருக்கவேண்டும்,

அதோடு வாழும் போது பொருளாதார ரீதியில்  வெளிநாட்டில் வேலை செய்யப் படிப்பு தேவையாக இருப்பதால், முன்னைய காலம் போல் இல்லாது இப்போ மாறி விட்டது, பிள்ளைகளின் எண்ணங்களும், முழுமையாக மாறிவிட்ட நிலையில், அதை நான் அறிந்து இப்படி வரண்களைத் தேடுகின்றேன். பிள்ளைகளின் எண்ணம் சரி தான், நல்லவாழ்க்கை, பொருளாதார வளர்ச்சி, நல்ல புரிந்துணர்வு, மகிழ்ச்சி என்பன எப்படி வரும். உழைப்பு இருந்தால் தான், பணம் இருந்தால் தான்.

எனவே, இப்போ, புலம் பெயர்ந்து வாழ்ந்தவர்களின் பிள்ளைகள் தான் திருமணம் செய்கிறார்கள், அடுத்த சந்ததி, இதனால், முந்தைய சந்ததிபோல் எண்ணம், சிந்தனை, இல்லாமல் போய்விட்டது, காலத்தின் மாற்றம், இந்த மண்ணின் வாசம், இந்த நாட்டின் மொழி,  படிப்பு, அறிவு தான் வாழ்வை மகிழ்ச்சித் தீர்மானிக்கிறது.  வாழவைக்கிறது. இல்லாவிட்டால்,

வாழலாம். முன்னேற, மற்றவர்களுக்கு உதவமுடியாத வாழ்க்கையாகிவிடும்.  எனவே, படிப்பு, பட்டம், மொழி அறிவு தேவைப்படுகிறது.  அவ்வாறு தேர்ந்து எடுக்கும் வரண் நல்ல வாழ்க்கையைத் தரும்...   எனவே,   இலங்கை, இந்தியா என வாழும் ஈழத்தமிழர்கள்,  நீங்களும் நல்ல வாழ்க்கைத் துணையைத் தேட, விண்ணப்பியுங்கள்.  உங்களால் வெளிநாட்டில் வேலை செய்யமுடியும் என்ற நிலையில் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கவும்.   நன்றி......


உடனே பதிவு செய்யுங்கள்


Forms = படிவங்கள்




வரவுக்கு   நன்றி



தகவல்....... 2

  1. திருமணத்திற்கான தேடுதலில் ஆண்கள் முன்வருவதாகத் தெரியவில்லை,  காலத்தை தவறவிட்டு கதறவேண்டாம். தாய் தந்தையர் இவர்களுடன் பேசமுடியாத அளவிற்கு இவர்கள் விலகி உள்ளார்களா, அல்லது தாய் தந்தையர் இவர்களை விடுவதாக இல்லையா புரியவில்லை. காலத்தை மதித்து திருமண பந்தத்திற்குள் வாருங்கள்.
  2. சுவிசர்லாந்தில் பல பெண்கள் சுவிஸ் பிரஜா உரிமையுடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு உரிதான, படிப்பிற்கு தகுதியான வரண் கிடைப்பது கஸ்ரமாகவுள்ளது, இலங்கையில் உள்ள படித்தவர்கள், அல்லது வெளிநாடுகளில் உள்ள படித்தவர்கள் விண்ணப்பியுங்கள்.




தமிழர் திருமணச்சேவை சம்பந்தமான விளக்கம்

1. எமது சேவையில் தாங்கள் இணையும் போது பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யப்பட்டு பதிவு இலக்கம் பெற்றபின், உங்களுக்கான வரணைத் தேடுவோம், அப்போ பொருத்தம் பார்த்தல், செயல்பாடுகள், தொலைபேசி தொடர்புகள், அதிக விளம்பரங்கள் செய்தல் போன்ற செலவினங்களுக்காக வெளிநாட்டில் உள்ளவர்களிடம் முதலில் 100 பிராங் அறவிடப்படும், இலங்கையில் உள்ளவர்களிடம் சுவிசர்லாந்தில் பதிவு செய்ய 50 பிராங் அறவிடப்படும். இலங்கையில் பதிவு செய்யும் போது 5000 ரூபாய்கள் அறவிடப்படும். அனைத்திற்கும் பற்று சீட்டும், உத்தரவாதமும் வழங்கப்படும். தாங்கள் இச்சேவையில் இருந்து விலகப்போகதாக தீர்மானித்தால், நீங்கள் கட்டிய பணத்தில் அரைவாசிப்பணம் திருப்பித்தரப்படும்.

2. வரண் தேடிய பின் பேசி முடித்து சம்மதம் என இருசாராரும் உடன்பட்டவுடன், வெளிநாட்டு திருமணத்திற்கு தலாம் 1000 பிராங்குகள் அறவிடப்படும். இலங்கையில் வரண் பெறுபவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்கள் அறவிடப்படும். இது எமது சேவை, பயணங்கள், ஊதியம் மற்றும் செலவுகளுக்கானதாக உள்ளடக்கி இருக்கும்.

3. இவை தான் எமது நிலையான கட்டண விபரங்கள். நாம் விளம்பரங்கள், தேடுதல்கள், பயணங்கள்  ஊதியம் போன்ற பல விடயத்தில் பணவிரயம் செய்கின்றோம், நேரத்தையும் செலவிடுகின்றோம், அத்துடன் இது மிகவும் சிரம்மான சேவை, வேலை என்பதை நீங்கள் உணரவேண்டும். எனவே, இது நியாயமான ஒரு சேவை, ஏமாற்றம் என்பது இல்லவேயில்லை. பதிவு செய்யப்பட்ட அருள் சோதிட நிறுவனத்தின் சேவையோடு பரிமானிக்கும் இணை சேவை தமிழர் திருமணசேவையாகும்.

4. எமது நிறுவனம் தனித்துவமானது, தனியாகவே இயங்குகிறது. யாரினதும் உதவியின்றி தனித்து செயல்படுவதால் எமது பெயரைச் சொல்லியாரும் செயல்பட நாம் அனுமதிக்காது தனியாகவே, தனிக் கொள்ளையோடு செயல்படுவதால், நீங்கள் நேரடித் தொடர்பைப் பேணுவது நல்லது யாரையும் நம்பாதீர்கள், எமது நேரடித் தொடர்பைப் பேணும்படி கேட்டுக் கொள்கின்றேன்.. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஒரு காரியாலயம் தை 2019ல் சேவையில் ஈடுபடும். அதுவரை  தொலைபேசித் தொடர்பிற்காக ஒரு தொலைபேசி நம்பர் வழங்கியுள்ளேன். அந்த நம்பருடன் தொடர்பு கொண்டால் உடனே எமக்கு தகவல் கிடைத்துவிடும். எனவே. எந்தவித குழப்பமும் ஏற்படாதவாறு ஒரு தலைமையில் இயங்குவது தமிழர் திருமணச்சேவையாகும்.

5. உங்கள் தொடர்பு, ஒத்துழைப்பு எமது துரித வளர்ச்சியைப் பெற்றுத்தரும், அது உங்கள், எமது இனத்தின் முன்னேற்றத்திற்கும், நின்மதிக்கும் வழிவகுக்கும், சமுதாய நோக்கத்தோடு சிந்தித்துச் செயலாற்றுகின்றோம். எமது முதன்மையான நோக்கம் எமது இனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்வதே, அதனால், நேர்மையாகவும், உண்மையாகவும், வெளிப்படையாகவும், நாம் செயல்படுகின்றோம். தாங்கள் எதுவிதத்திலும் தயங்காது எப்போதும் அழைக்கலாம். தாரமிழந்தவர்கள், விவாகரத்துச் செய்தவர்களும் மறுமணம் செய்ய எம்மை அழைக்கலாம். அத்தகைய வரண்கள் சுவிஸ் ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ளவர்கள் கேட்டுள்ளார்கள். எனவே, மறுமணத்திற்காக இலங்கையிலிருந்தும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.

6. அருள் சோதிடம் சுவிசர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, நன்மையாகச் செயல்படுவதே எமது பணியாகும். இது சுவிசர்லாந்தின் சட்டதிட்டமாகும். எனவே, நாம் அவற்றின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் ஆதரவும், மற்றவர்களுக்கு எமது சேவையைத் தெரியப்படுத்தலும், எமது இனத்திற்காக நீங்கள் செய்யும் நற்செயலாக நினைத்துச் செயல்படுங்கள்.   இது கூட எமது மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்மையே, இது உலகத் தமிழருக்கான திருமணச்சேவையாகும் எனவே, ஈழத்தமிழர்கள் அனைவருக்குமானது என்பதை மறக்காதீர்கள். உங்கள் ஆதரவை எமக்கு வழங்குங்கள், நாமும் எமது மக்களின், எமது இனத்தின் வளர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும், அக்கறையுள்ளவர்கள் என்பதை நீங்கள் போகப்போகப் புரிந்து கொள்வீர்கள்.  நன்றி. பணிவன்பை வளர்ப்போம்……

எல்லாம் வெற்றியோடு முன்னேற இறைவன் துணை நிற்சயமுண்டு. வாழ்க தமிழ், வளர்க தமிழர்.
பொறுப்பாளர்: அருள் தெய்வேந்திரன் சுவிசர்லாந்து.
www.arulsothidam.com
00041 78 350 30 51  (Viber,Imo,WhatsApp and Telegram)
Arulsothidam
Tamils Marriage Service
Back to content | Back to main menu